திருவந்திபுரத்தில் ஒரே நாளில் 95 ஜோடிக்கு திருமணம்

திருவந்திபுரத்தில் ஒரே நாளில் 95 ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது.

Update: 2022-10-30 18:45 GMT

நெல்லிக்குப்பம், 

கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் 108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்ற தேவநாதசுவாமி கோவில் உள்ளது. ஒவ்வொரு முகூர்த்த நாட்களிலும் கோவில் எதிரில் உள்ள மலையில் 50 முதல் 200-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும். அதேபோல் திருவந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபங்களிலும் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் நேற்று முகூர்த்தநாள் என்பதால் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் மலையில் உள்ள மண்டபத்தில் அதிகாலை முதல் திருமணம் நடைபெற்று வந்தது. இதில் மலையில் 70 திருமணமும், கோவிலை சுற்றி உள்ள தனியார் மண்டபங்களில் 25 திருமணமும் என மொத்தம் 95 திருமணங்கள் நடைபெற்றது. தொடர்ந்து திருமண ஜோடிகள் தங்களது குடும்பத்தினருடன் தேவநாதசுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று ஒரே நாளில் 95 ஜோடிக்கு திருமணம் நடைபெற்றதால் ஏராளமான வாகனங்களில் பொதுமக்கள் குவிந்தனர். இதன் காரணமாக கடலூர் - பாலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்