பிளஸ் 2 பொதுத்தேர்வில் 90.41 சதவீதம் தேர்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வில் 90.41 சதவீதமும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 84.47 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்

Update: 2022-06-20 16:33 GMT

கள்ளக்குறிச்சி

பிளஸ்-2 பொதுத் தேர்வு

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என 122 பள்ளிகள் உள்ளன. இதில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் 9,252 மாணவர்கள், 9,313 மாணவிகள் என மொத்தம் 18,565 பேர் தேர்வு எழுதினார்கள். இவர்களில் 8,076 மாணவர்கள், 8,709 மாணவிகள் என மொத்தம் 16,785 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி விகிதம் 87.29 சதவீதம் ஆகும். மாணவர்கள் 87.29 சதவீதமும், மாணவிகள் 93.51 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர்.

எஸ்.எஸ்.எல்.சி.பொதுத் தேர்வு

அதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மாவட்டத்தில் உள்ள 122 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 11,003 மாணவர்கள், 10,295 மாணவிகள் என மொத்தம் 21,298 பேர் தேர்வு எழுதினார்கள்.

இவர்களில் 8,735 மாணவர்கள், 9,256 மாணவிகள் என மொத்தம் 17,991 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி விகிதம் 84.47 சதவீதம் ஆகும். அதாவது மாணவர்கள் 79.48 சதவீதம் பேரும், மாணவிகள் 89.90 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்விலும் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்