பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த 9 கடைகளுக்கு அபராதம்

மயிலாடுதுறை நகரில் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த 9 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;

Update:2023-10-12 00:15 IST

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட கண்ணாரதெரு, திருவாரூர் சாலை ஆகிய பகுதிகளில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவின் பெயரில் சுகாதார அலுவலர் சுரேஷ் தலைமையில் சுகாதார ஆய்வாளர் டேவிட் பாஸ்கர் ராஜ், பழனிச்சாமி ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் கடைகளில் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது. அதன்படி ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் (நெகிழி) பொருட்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட 9 கடை உரிமையாளர்களுக்கு என மொத்தம் ரூ.3 ஆயிரம் அபராதத் தொகை விதிக்கப்பட்டது. மேலும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் கடைகளில் பயன்படுத்தப்படுவதை மீண்டும் கண்டறியப்பட்டால் கடைகளுக்கு சுகாதார அலுவலர்கள் மூலம் சீல் வைத்து, கடைகளின் உரிமை நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என நகராட்சி அலுவலர்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்