தமிழ்நாட்டில் ஈரோடு, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட 9 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது.!
தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடுமையான வெப்பத்தில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள இளநீர், தர்பூசனி மற்றும் குளிர்பான கடைகளில் குவிகின்றனர்.
மேலும், பகல் நேரங்களில் அனல் காற்று வீசுவதனால், மக்கள் மதிய நேரங்களில் வெளியே வர தயங்குகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் 9 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.
கரூர் பரமத்தி, ஈரோடு, திருத்தனி, மதுரை நகரம், மதுரை விமான நிலையம், நாமக்கல், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, வேலூர் ஆகிய நகரங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது.