விருதுநகர் ரோசல்பட்டியில் பாண்டியன்நகர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் காசு வைத்து சூதாடிக் கொண்டிருந்ததாக ரோசல்பட்டியை சேர்ந்த செல்வம் (வயது 48), குருசாமி (65), மணிராஜ் (43), குருசாமி (42), ஜக்கம்மாள்புரத்தை சேர்ந்த கணேசன் (53), சுப்பிரமணி (60), காந்தி நகரை சேர்ந்த நாகேந்திரன் (60), கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த மகாலிங்கம் (49) உள்பட 9 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.