ஏற்காட்டில் வாடகைக்கு விடப்பட்ட 9 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை

ஏற்காட்டில் வாடகைக்கு விடப்பட்ட 9 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;

Update: 2023-01-21 20:18 GMT

ஏற்காடு, 

ஏற்காட்டில் சட்டத்திற்கு புறம்பாக மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு விடுவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று ஏற்காட்டில் வாடகை ஆட்டோ மற்றும் கார் டிரைவர்கள் சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாண்குமாரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரை தொடர்ந்து அவரும், வாகன ஆய்வாளர் மாலதி மற்றும் போக்குவரத்து துறையினர் ஏற்காடு பூங்கா அருகில் வாகன சோதனை ெசய்தனர். அப்போது மதுரை மற்றும் சென்னையில் இருந்து வந்த சுமார் 10 பேர், சேலம் ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து 6 மோட்டார் சைக்கிள்களை ஒரு நாளைக்கு 500 ரூபாய் வீதம் வாடகைக்கு எடுத்து ஏற்காட்டை சுற்றி பார்க்க வந்தது தெரியவந்தது. அந்த 6 மோட்டார் சைக்கிள்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் ஏற்காடு ரோஜா தோட்டம் பகுதியில் சோதனையின் போது ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து வாடகைக்கு எடுத்து ஓட்டிவந்த 3 மோட்டார் சைக்கிள்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த 9 மோட்டார் சைக்கிள்கள் ஏற்காடு போலீஸ் நிலையத்தில ஒப்படைக்கப்பட்டதுடன், இது தொடர்பாக வழக்கும்பதிவு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்