திறனறி தேர்வுக்கு 8-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
திறனறி தேர்வுக்கு 8-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
2022-23 ஆம் கல்வியாண்டிற்கு தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசு சார்பில் வருகிற பிப்ரவரி மாதம் 25-ந்தேதி தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி தேர்வு (என்.எம்.எம்.எஸ்.) நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் காலத்தில் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும். எனவே பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் இத்தேர்விற்கான விண்ணப்பங்களை அடுத்த மாதம் (ஜனவரி) 20-ந்தேதிக்குள் https://dge1.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேர்வு கட்டண தொகை ரூ.50-ஐ தாங்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் அடுத்த மாதம் 24-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை https://dge1.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால், பள்ளிகள் திறந்தவுடன் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.