8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தேனி அருகே பெற்றோர் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-12 19:00 GMT

தேனி அருகே பூதிப்புரம் வாழையாத்துப்பட்டி விலக்கு பகுதியை சேர்ந்தவர் காட்டுராஜா (வயது 46). அவருடைய மகள் பிருந்தாஸ்ரீ (13). அவர் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். அங்குள்ள ஒரு அரசு பெண்கள் விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார். கோவில் திருவிழாவுக்காக வாழையாத்துப்பட்டிக்கு வந்திருந்தார். அதன் பின்னர் அவர் சரியாக பள்ளிக்கு செல்லவில்லை. அவரை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை பள்ளியில் நடந்த முழு ஆண்டுத் தேர்வுக்கு செல்லுமாறு பெற்றோர் கூறினர். பள்ளிக்கு புறப்பட்டு வருவதாக கூறி வீட்டின் மாடிக்கு சென்றவர் நீண்டநேரமாக கீழே வரவில்லை.

இந்நிலையில் அவருடைய பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்தபோது அங்கு பிருந்தாஸ்ரீ சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவருடைய தந்தை காட்டுராஜா கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்