மக்களைத்தேடி மாநகராட்சி குறைதீர்க்கும் முகாமில் 84 மனுக்கள் பெறப்பட்டன
மக்களைத்தேடி மாநகராட்சி குறைதீர்க்கும் முகாமில் 84 மனுக்கள் பெறப்பட்டன;
திருச்சி மாநகராட்சி சார்பில் மக்களைத்தேடி மாநகராட்சி குறைதீர்க்கும் முகாம் நேற்று பாலக்கரை பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் பயனாளிகளுக்கு கட்டிட அனுமதி, சொத்து வரி பெயர் மாற்றம் உள்ளிட்ட ஆணைகளை வழங்கினார். இந்த மண்டல அலுவலகத்திற்குட்பட்ட 13-வது வார்டு பகுதி பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளித்தனர். இதில் மொத்தம் 84 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.