800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தேங்காப்பட்டணம் அருகே800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Update: 2022-07-22 18:37 GMT

புதுக்கடை:

தேங்காப்பட்டணம் அருகே ராமன்துறை கடற்கரை கிராமத்தில் கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலர் வயோலா பாய் மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையின் அருகில் ஒரு வீட்டின் பின்புறம் சாக்கு மூடைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

பின்னர் நடத்திய விசாரணையில், கேரளாவுக்கு கடத்த 800 கிலோ ரேஷன் அரிசியை மர்மநபர்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தானிய கிட்டங்கியில் ஒப்படைத்தனர். மேலும் இந்த அரிசியை பதுக்கி வைத்தது யார்? என வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்