பதுக்கி வைத்திருந்த 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
வாணியம்பாடி அருகே பதுக்கி வைத்திருந்த 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.;
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள கொல்லகுப்பம் கிராமத்தில் வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக பிளாஸ்டிக் சாக்குமூட்டைகளில் சாலை ஓரம் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தாசில்தார் சம்பத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வட்ட வழங்கல் அலுவலர் சிலம்பரசன் தலைமையிலான வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாணியம்பாடியில் இருந்து கொல்லகுப்பம் செல்லும் சாலை ஓரம் 16 பிளாஸ்டிக் மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 800 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வாணியம்பாடி நுகர் பொருள் வாணிப கடங்கில் ஒப்படைத்தனர்.
மேலும் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த நபர்கள்குறித்து வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.