இடையில் நின்ற 8 மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பு

மேல்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இடையில் நின்ற 8 மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.;

Update: 2023-09-02 19:04 GMT

அரக்கோணம்

மேல்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இடையில் நின்ற 8 மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

அரக்கோணம் ஒன்றியம், மேல்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கும்பினிப்பேட்டை இருளர் பகுதியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்பில் மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை சந்தித்து கல்வியின் முக்கியத்துவம் மற்றும் குழந்தை திருமணத்தை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது அந்த பகுதியில் பள்ளிக்கு செல்லாமல் இடையில் நின்ற மாணவ-மாணவிகள் 8 பேரை மீண்டும் பள்ளியில் சேர்த்தனர். பின்னர் அவர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

அப்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூக பணியாளர் பார்த்திபன், அரக்கோணம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தான்யா, ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம், பள்ளி தலைமை ஆசிரியர் கரிமுல்லா, அங்கன்வாடி பணியாளர்கள் ஜீவிதா, உமாராணி மற்றும் பலர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்