உடன்குடியில்சூதாடிய 8 பேர் கைது
உடன்குடியில் சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.;
குலசேகரன்பட்டினம்:
உடன்குடி அருகிலுள்ள சாதர்கோன்விளையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 37). இவரும், பிள்ளையார்பெரியவன் தட்டை சேர்ந்த சக்திகுமார் (48), சிதம்பரம்தெருவை சேர்ந்த கம்சாமுகைதீன் (28), சந்தையடி தெருவை சேர்ந்த ஐகுபர் சாதிக் (50), பெருமாள்புரத்தைச் சேர்ந்த ஜெபராஜ் (43), செட்டியாபத்து சேர்ந்த பெரியசாமி (64), உடன்குடி நடுக்கடை தெருவை சேர்ந்த செந்தில் (47), சந்தையடி தெருவைச் சேர்ந்த கணேசன் (50) ஆகிய 8 பேரும் உடன்குடியிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பின்பகுதியில் உள்ள உடங்காட்டில் காசு வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று, சீட்டுவிளையாடி கொண்டிருந்த அந்த 8 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடமிருந்து ரூ.5,870 பணம் மற்றும் சீட்டு கட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர்.