8 பேர் கைது

பாவூர்சத்திரம் அருகே கோவில் கொடை விழா மோதல் வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்;

Update: 2022-11-03 18:45 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலஅரியப்பபுரம் நாடாகண்ணுபட்டியில் பெரிய அம்மன் கோவில் கொடை விழாவும், அருகே உள்ள குமாரசாமிபுரத்தில் முப்புடாதி அம்மன் கோவில் கொடை விழாவும் 4 நாட்கள் நடைபெற்று வந்தன. கொடை விழா முடியும் நாளில் இரண்டு கோவிலை சேர்ந்த நபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கல்வீச்சு நடந்தது. இதில் 8 பேர் காயமடைந்தனர். மீண்டும் மோதல் ஏற்படாத வகையில் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த மோதல் தொடர்பாக பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து நாடாக்கண்ணுபட்டியைச் சேர்ந்த கண்ணன், முருகேசன், கு.ராமசந்திரன், பாவூர்சத்திரம் வி.ஏ.நகர் மோகன்ராஜா, குமாரசாமிபுரத்தைச் சேர்ந்த சுரேஷ், தெ.ராமச்சந்திரன், மாதவன், குமரேசன் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்