சாராயம் விற்ற பெண்கள் உள்பட 8 பேர் கைது
ேஜாலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஆம்பூர் பகுதிகளில் சாராயம் விற்ற பெண்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
ேஜாலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஆம்பூர் பகுதிகளில் சாராயம் விற்ற பெண்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாராய வேட்டை
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் காதர் கான், அரசு, ஜெயச்சந்திரன், நடராஜன் உள்ளிட்ட போலீசார் தாமலேரிமுத்தூர் பகுாதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காந்திநகரில் பின்புறத்தில் மறைவாக சாராயம் விற்றுக்கொண்டிருந்த ரவி என்பவரின் மனைவி மலர் (வயது 41) என்பவரை கைது செய்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
அம்மையப்பன் நகர் பகுதியில் சேகர் மனைவி தேன்மொழி (56) என்பவரையும் பெரிய முக்கனூர் சிலிப்பி வட்டம் பகுதியில் மகி (59), மேட்டுசக்கரகுப்பம் பகுதியில் முனிரத்தினம் மகன் திருமூர்த்தி (22) ஆகியோரும் கைது செய்யப்பட்டு சாராயம், மதுவை பறிமுதல் செய்தனர்.
நாட்டறம்பள்ளி
இதேபோல் நாட்டறம்பள்ளி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் புதுப்பேட்டை, பச்சூர், டோல்கேட் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கண்ணையன் மனைவி சத்யா (வயது 55) பச்சூர் அருகே சாமு கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ் மகன் சிவராஜ் (வயது 55) மற்றும் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த பூபதி கவுண்டர் மகன் சின்னமணி (வயது 40) ஆகிய மூவரும் தங்களது வீட்டின் பின்புறத்தில் மறைவாக வைத்து கள்ள சாராயம் விற்றுக் கொண்டிருந்தனர் இவர்களிடமிருந்து தலா 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கைதான 3 பேரையும் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
ஆம்பூர்
ஆம்பூர் டவுன் போலீசார் கஸ்பா பகுதியில் ரோந்து சென்றபோது மோகன் மனைவி மாதவி (வயது 66) என்பவர் சாராயம் விற்றது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். சாராய வேட்டையில் மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.