2 டன் குட்கா பதுக்கிய 8 பேர் கைது

சூலூர் பகுதியில் 2 டன் குட்கா பதுக்கி வைத்திருந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மற்றும் 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-11-04 18:45 GMT

சூலூர்

சூலூர் பகுதியில் 2 டன் குட்கா பதுக்கி வைத்திருந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மற்றும் 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசார் சோதனை

கோவை மாவட்டத்தில் சேலம்- கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் சூலூரை அடுத்த நீலம்பூர் தனியார் ஓட்டல் அருகே குட்கா கடத்தி வரப்படுவதாகவும், மைலம்பட்டியில் விற்பனைக்காக குட்கா, புகையி லை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும் போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத், மோகனசுந்தரி, தீபிகா மற்றும் போலீசார் சிவக்குமார், ஜெய்ஹிந்த், செல்லப்பாண்டி, பழனிக்குமார், சந்துரு உள்பட போலீசார் நேற்று திடீரென்று வாகன சோதனை நடத்தினர்.

குட்கா, வாகனங்கள்

அப்போது சென்னையில் இருந்து கோவை வந்த தனியார் பஸ்ஸை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடத்தி கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அந்த சொகுசு ஆம்னி பஸ்சை பறிமுதல் செய்த னர்.

இதையடுத்து அந்த பஸ்சை ஓட்டிவந்த பவானியை சேர்ந்த டிரைவர் செந்தில்குமார் (47), கிருஷ்ணகிரியை சேர்ந்த கிளீனர் மெகபூபாட்ஷா (30), கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட் களை எடுத்து செல்ல காரில் வந்த அனுப்பர் பாளையத்தை சேர்ந்த ஜெய்பிரகாஷ் (44), ஆட்டோவில் வந்த பீளமேட்டை சேர்ந்த செந்தில் ராஜா (42) ஆகிய 4 பேரையும் மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர். இதைய டுத்து 500 கிலோ குட்கா மற்றும் 3 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

குடோனில் பதுக்கல்

அதைத்தொடர்ந்து மைலம்பட்டியில் போலீசார் சோதனை நடத்தி னர். அப்போது அங்குள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்திருந்த 1,500 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதை பதுக்கி வைத்திருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அமராராம் (22), மைசூரை சேர்ந்த பரத் பட்டேல் (27), ராஜஸ்தா னை சேர்ந்த கோபால் (22), மைபால் (22) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள் மற்றும் அங்கிருந்து ரூ.20 லட்சத்து ஆயிரத்து 800 ரொக்கப் பணத்தை யும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பார்வையிட்டார்.

பாராட்டு

இதையடுத்து சூலூர் பகுதியில் கடத்தி வரப்பட்ட மற்றும் பதுக்கி வைத்திருந்த 2 டன் குட்கா, ரூ.20 லட்சம், 7 வாகனங்களை பறிமுதல் செய்ததோடு 8 பேரை கைது செய்த கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த் ஆரோக்கியராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் மாதை யன் தலைமையிலான போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாரா யணன் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்