அதிக பாரம் ஏற்றிய 8 கனரக லாரிகள் பறிமுதல்

அதிக பாரம் ஏற்றிய 8 கனரக லாரிகள் பறிமுதல்;

Update: 2023-06-01 18:45 GMT

களியக்காவிளை:

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இதில் அதிக பாரம் ஏற்றி செல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அதிகாரிகள் மற்றும் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று அதிகாலையில் களியக்காவிளையை அடுத்த படந்தாலுமூடு பகுதியில் அதிக பாரம் ஏற்றி சென்ற 8 கனரக லாரிகளை களியக்காவிளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்