வெறிநாய்கள் கடித்து 8 ஆடுகள் செத்தன.
வெள்ளகோவில் அருகே வெறிநாய்கள் கடித்து 8 ஆடுகள் செத்தன.;
திருப்பூர்
வெள்ளகோவில் அருகே வெறிநாய்கள் கடித்து 8 ஆடுகள் செத்தன.
ஆடுகள் சாவு
வெள்ளகோவிலை அடுத்த பாப்பம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவருக்கு பாச்சங்காடு என்ற பகுதியில் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் பட்டி அமைத்து செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் என 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் இரவு தனது ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்று உள்ளார். மறுநாள் காலை தோட்டத்திற்கு வந்து பார்த்த போது 8 ஆடுகள் செத்துக்கிடந்தன. இரவு நேரத்தில் பட்டிக்குள் புகுந்த வெறிநாய்கள் ஆடுகளை கடித்து குதறி உள்ளது. இதில் செம்மறி ஆடு, வெள்ளாடு என மொத்தம் 8 ஆடுகள் செத்துப்போனது.
இது குறித்து போலீசாருக்கும்,வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பார்வையிட்டனர்.
கோரிக்கை
வெள்ளகோவில் மற்றும் காங்கயம்பகுதியில் பட்டிகளுக்குள் வெறிநாய்கள் புகுந்து ஆடுகளை கடித்து கொல்வது வாடிக்கையாகி விட்டது. எனவே வெறிநாய்களை பிடித்து அவற்றை அப்புறப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.