கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்கள் ரத்து

டெல்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் 15 விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டுச்சென்றன.

Update: 2023-11-30 06:06 GMT

சென்னை,

சென்னையில் நேற்று முதல் தற்போது வரை தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால், சாலைகளின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், மக்கள் அவதியடைந்துள்ளனர். சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில், 8 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 4 விமானங்கள், சென்னைக்கு வர வேண்டிய 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

மேலும், சென்னையில் இருந்து செல்லக்கூடிய அந்தமான், ஹைதராபாத், ஹூப்ளி, டெல்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் 15 விமானங்கள் கால தாமதமாக புறப்பட்டுச்சென்றன.

 

Full View
Tags:    

மேலும் செய்திகள்