பெரம்பலூர் மாவட்டத்திற்கு பொது கணக்கு குழு 8-ந்தேதி வருகை

பெரம்பலூர் மாவட்டத்திற்கு பொது கணக்கு குழு 8-ந்தேதி வருகிறது.

Update: 2023-02-18 19:04 GMT

பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகிற 8-ந்தேதி பொது கணக்கு குழுவின் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில், அக்குழுவினர் வருகை தரவுள்ளதை தொடர்ந்து, அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுடான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பேசுகையில், பொது கணக்குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில், நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் டாக்டர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அந்த குழுவை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்கள். இக்குழுவினர் மகளிர் திட்ட செயல்பாடுகள், அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மேற்கொள்ளப்பட்ட பணிகள், நில அளவை, சுகாதாரம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் செயல்பாடுகள், பேரூராட்சி, நெடுஞ்சாலைத்துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் தற்போதைய நிலை போன்ற பல்வேறு துறைகளின் மூலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சி பணிகளின் தற்போதைய நிலை, பணிகள் முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார்கள், என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, திட்ட இயக்குனர் கருப்பசாமி (மகளிர் திட்டம்), லலிதா (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்