லோக் அதாலத் மூலம் ரூ.8½ கோடி இழப்பீட்டு தொகை

லோக் அதாலத் மூலம் ஏராளமான வழக்குகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டது. இதில் பயனாளிகளுக்கு ரூ.8½ கோடி இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.

Update: 2023-03-12 21:01 GMT


லோக் அதாலத் மூலம் ஏராளமான வழக்குகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டது. இதில் பயனாளிகளுக்கு ரூ.8½ கோடி இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.

மதுரை ஐகோர்ட்டு

மதுரை ஐகோர்ட்டில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடந்தது. இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், இன்சூரன்ஸ் வழக்குகள் என பல்வேறு வழக்குகளுக்கு சுமூக தீர்வு காண்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. நீதிபதி ஸ்ரீமதி உள்ளிட்ட நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் உறுப்பினர்கள் மக்கள் நீதிமன்றத்தில் ஈடுபட்டனர்.

மொத்தம் 313 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டதில் 28 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.3 கோடியே 28 லட்சத்து 42 ஆயிரத்து 373 நிவாரணம் வழங்கப்பட்டது.

92 வழக்குகள் தீர்வு

இதே போல மதுரை மாவட்ட கோர்ட்டில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியில் மொத்தம் 106 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. இதில் 92 வழக்குகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டன. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.5 கோடியே 35 லட்சத்து 700- ஐ வழங்கப்பட்டது.

மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி வடமலை தலைமையிலான நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியில் பல்வேறு நீதிபதிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று இருந்தனர். மாவட்ட கோர்ட்டில் நடந்த இந்த லோக் அதாலத் நிகழ்ச்சிக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் தீபா ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்