751 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்

கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் 751 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்

Update: 2022-09-17 18:45 GMT

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் அரசு மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகள், மேக்களூர், ஐங்குணம், வேடநத்தம் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

மொத்தம் 751 மாணவ, மாணவிகளுக்கு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி விலையில்லா சைக்கிள்கள் வழங்கினார்.

கீழ்பென்னாத்தூர்அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு பேரூராட்சி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.

நகர தி.மு.க. செயலாளர் அன்பு, முன்னாள் பேரூராட்சி தலைவர் பன்னீர்செல்வம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கவிதாஏழுமலை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேஷ், பேரூராட்சி துணைத்தலைவர் தமிழரசி சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமைஆசிரியை சுமதி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கி பேசினார்.

விழாவில் மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், அட்மா ஆலோசனைகுழு தலைவர் சிவக்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் பாக்கியராஜ், கனகா பார்த்திபன், ஜீவாமனோகர், அம்பிகா ராமதாஸ், கே.பி.மணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மேக்களூர் கேசவன், வேடநத்தம் குப்புசாமி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் ராமச்சந்திரன், வேடநத்தம் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாண்டுரங்கன் உள்பட பல்வேறு அணிகளை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்