வேலைவாய்ப்பு முகாமில் 75 பேருக்கு பணி நியமன ஆணை

நாகையில் நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான 75 பேருக்கு கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.;

Update: 2023-06-10 19:15 GMT

நாகையில் நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான 75 பேருக்கு கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

வேலைவாய்ப்பு முகாம்

நாகையில் உள்ள ஏ.டி.எம். மகளிர் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. முகாமினை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் தகுதியான இளைஞர்களுக்கு தகுதி மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப வேலைவாய்ப்பு கிடைக்க வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது.

அதன்படி தற்போது நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 21 தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்றனர்.

மீண்டும் முயற்சித்து...

இதில் வேலை வாய்ப்பை பெற்றவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வேலை கிடைக்காதவர்கள் மனம் தளராமல் மீண்டும் முயற்சித்து வேலை வாய்ப்பை பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதில், 75 பேர் தனியார் நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணையினை கலெக்டர் வழங்கினார்.

முகாமில் கல்லூரி முதல்வர் அன்புச்செல்வி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிகழ்ச்சி மேலாளர் செல்வி பிருந்தா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்