வாடிப்பட்டியில் ஏ.டி.எம்.ல் பணம் எடுத்து தருவதாக கூறி ரூ.70 ஆயிரம் அபேஸ்

வாடிப்பட்டியில் ஏ.டி.எம்.ல் பணம் எடுத்து தருவதாக கூறி ரூ.70 ஆயிரம் அபேஸ் செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்

Update: 2023-03-29 21:22 GMT

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி அருகே செம்மினிப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த ராமசாமி மனைவி ஜெயா (வயது 22). இவர் தாதம்பட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மகளிர் சுய உதவி குழு கடன் ரூ.50 ஆயிரமும், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் கிடைத்த ரூ.25 ஆயிரத்தையும் வாடிப்பட்டியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கில் வைத்திருந்தார். இந்நிலையில் தனக்கு பணம் தேவைப்பட்டதால் அதை எடுக்க வங்கி வாசலில் உள்ள ஏ.டி.எம்.மிற்கு வந்து பணம் எடுக்க முயற்சி செய்தார். ஆனால் பணம் வரவில்லை. அப்போது அருகில் நின்ற 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் தான் பணம் எடுத்து தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய ஜெயா ஏ.டி.எம். கார்டை வாங்கி அவரிடம் கொடுத்தார். அந்த நபர் பணம் எடுப்பது போல் நடித்து தனக்கும் பணம் வரவில்லை. எனவே, வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்து வாருங்கள் எனக்கூறினார். இதையடுத்து ஜெயா வங்கி கணக்கு புத்தகத்தை எடுக்க வீட்டுக்கு சென்றார். அந்த நேரத்தில் மர்ம நபர் ஜெயாவின் வங்கி கணக்கில் இருந்து 2 தவணைகளில் ரூ.10 ஆயிரமும், ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி மதுரையில் உள்ள பிரபல நகை கடையில் ரூ.50 ஆயிரத்துக்கு நகையும் வாங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயா இதுகுறித்து வாடிப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேர்வை வழக்குப்பதிவு பணத்தை அபேஸ் செய்த வாலிபரை தேடி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்