குற்ற செயல்களில் ஈடுபட்ட 70 பேர் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-16 18:45 GMT

விழுப்புரம், 

பொங்கல் விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் முதல் போலீசார் வரை 1,200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பதிவெண் இல்லாத மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத 51 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா விற்ற 3 பேரும், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்ற 9 பேரும், சாராய வழக்குகளில் 48 பேரும், பணம் வைத்து சூதாடிய 6 பேரும், விபசார வழக்கில் 2 பேரும், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 2 பேரும் ஆக மொத்தம் 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்