திருவள்ளூர் மாவட்டத்தில் போலீஸ் தேர்வை 7 ஆயிரத்து 221 பேர் எழுதினர்

திருவள்ளூர் மாவட்டத்தில் போலீஸ் தேர்வை 7 ஆயிரத்து 221 பேர் எழுதினர்.;

Update:2022-11-28 17:02 IST

7 ஆயிரத்து 221 பேர்

2-ம் நிலை போலீஸ் கான்ஸ்டபிள், ஜெயில் வார்டன், தீயணைப்பு வீரர் போன்ற பணியிடங்களுக்கு நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் எழுத்து தேர்வு நடைபெற்றது. திருவள்ளூர், காக்களூர், திருப்பாச்சூர், கவரப்பேட்டை, பஞ்செட்டி போன்ற தேர்வு மையங்களில் எழுத்து தேர்வு நடைபெற்றது.

தேர்வு எழுதுவதற்கு திருவள்ளூர் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 217 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் நேற்று 7 ஆயிரத்து 221 பேர் தேர்வு எழுதினார்கள்.

ஆய்வு

இந்த எழுத்து தேர்வை காவலர் பயிற்சி கல்லூரி ஐ.ஜி. அருண் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மீனா ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்