வாடகை செலுத்தாத 7 கடைகளுக்கு 'சீல்'

பெரியகுளத்தில், வாடகை செலுத்தாத 7 கடைகளுக்கு இந்து சமய அறநிலையத்துறையினர் ‘சீல்’ வைத்தனர்.

Update: 2023-06-08 13:37 GMT

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான காமாட்சியம்மன் கோவில், பெரியகுளத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட 28 கடைகள், பெரியகுளம் தென்கரை வைகை அணை சாலையில் இருக்கிறது. இதில் 7 கடைகளுக்கு பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க, இந்து சமய அறநிலையத்துறையின் திண்டுக்கல் இணை ஆணையர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் தேனி உதவி ஆணையாளர் கலைவாணன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் செந்தில்முருகன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று 7 கடைகளுக்கு 'சீல்' வைத்தனர். அப்போது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி யசோதா, காமாட்சி அம்மன் கோவில் செயல் அலுவலர் வேலுச்சாமி, சரக ஆய்வாளர் கார்த்திகேயன், கோவில் அறங்காவலர் மணி, அறங்காவலர் குழு உறுப்பினர் காஞ்சிவனம், வருவாய்த் துறையினர் உடனிருந்தனர். மேலும் தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் வாடகை செலுத்தாத கடைகளும் 'சீல்' வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்