மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு;
கும்பகோணம் அரசு மருத்துவமனை சாலை அருகே பெரிய தம்பி நகரை சேர்ந்தவர் கலாவதி(வயது67). இவர் தினமும் தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள தெருக்களுக்கு நடைபயிற்சி செய்வது வழக்கம். அதன்படி நேற்று காலை நடைபயிற்சிக்கு சென்ற போது 2 மர்மநபர்கள் கலாவதி கழுத்தில் கிடந்த 10 பவுன் சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். அப்போது 7 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மீதமுள்ள 3 பவுன் சங்கிலியை மர்மநபர்கள் பறிக்க முடியாமல் சென்றுவிட்டனர். இதுகுறித்து கலாவதி கொடுத்த புகாரின் பேரில் கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.