திருச்சி மாநகரில் 7 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

திருச்சி மாநகரில் 7 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டனர்.

Update: 2022-07-25 19:58 GMT


திருச்சி மத்திய மண்டலத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர்கள் திருச்சி மாநகரில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சுலோக்‌ஷனா கோட்டை போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், ரத்தினவள்ளி தில்லைநகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், கருணாகரன் தீவிர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், மது விலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டராக வசுமதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் உறையூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த மணிராஜ் மாநகர நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார். குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த கார்த்திகா பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த அஜீம் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்