ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 7 பேர் கைது
ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை சிலைமான் சங்கையா கோவில் தெருவை சேர்ந்தவர் காந்தி. இவருடைய மகன் சங்குகண்ணன் (வயது 27). ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்த இவரை, மர்மநபர்கள் வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்டது, கீழடியை சேர்ந்த முத்துபாலகிருஷ்ணன் (வயது 19), சுபாஸ்சந்திரபோஸ் (23), சுதாகர் (21), வீரமணி (25), 15 வயது சிறுவன், மதுரை அண்ணாநகரை சேர்ந்த அருண்குமார் (21), சின்ன உடைப்பு பகுதியை சேர்ந்த சுதன்ராஜ் (24) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். கஞ்சா வாங்குவது தொடர்பாக முன்விரோத பிரச்சினையில் கொலை சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.