சூதாடிய 7 பேர் கைது
ஆலங்குளம் அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.;
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தோட்டத்தில் பணம் வைத்து சூதாடியதாக, உடையாம்புளி கிராமத்தை சேர்ந்த ரவி (வயது 60), முத்துக்கண்ணன் (37), வீரவநல்லூரை சேர்ந்த அங்கப்பன் (49), கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பெரியசாமி (40), மாணிக்கம் (33), நாகல்குளத்தை சேர்ந்த காசிப்பாண்டி (40), அம்பையை சேர்ந்த ஜெகநாதன் (60) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.