புதுச்சேரி அமுதசுரபி ஊழியர்கள் 7 பேர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை முயற்சி..!

புதுச்சேரி அமுதசுரபி ஊழியர்கள் 7 பேர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-28 07:45 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபி கூட்டுறவு நிறுவனத்தின் சார்பில் மளிகை பொருட்கள் விற்பனை நிலையம், பெட்ரோல் பங்க், மதுபானக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இங்கு 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 30 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் தங்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க வேண்டும், அமுதசுரபிக்கு அரசு நிறுவனங்கள் கொடுக்க வேண்டிய பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஊழியர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி அமுதசுரபி ஊழியர்கள் 7 பேர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அருகில் இருந்த சக ஊழியர்கள் அவர்களை மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்துபோலீசார் விசாரித்து வருகின்றனர். அமுதசுரபி ஊழியர்கள் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என்று அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்