7-ந்தேதி முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 7-ந்தேதி முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

Update: 2022-06-03 16:03 GMT

நாகப்பட்டினம:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 7-ந்தேதி முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

மாநில நிர்வாகிகள் கூட்டம்

நாகையில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொருளாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில செயலாளர் மகேந்திரன் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட நிர்வாகிகள் சுரேஷ் கண்ணா, வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

இணையதள சேவை

பொது வினியோகத் திட்டத்திற்கு என்று தனித்துறை உருவாக்கப்பட வேண்டும். நிறுத்திவைக்கப்பட்ட அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். புதிய ஊதிய உயர்வை மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக வழங்குவதற்கு ஏதுவாக மாதிரி பட்டியலை வெளியிட வேண்டும்.

அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் 4 ஜி சிம் கார்டு வழங்க வேண்டும். மோடம் வழங்கி தடையில்லா இணையதள சேவை வழங்க வேண்டும். கண் விழித்திரை மூலம் பொருட்கள் விற்பனை செய்ய ஆவணம் செய்ய வேண்டும். தரமற்ற பொருட்களுக்காக நியாய விலைக்கடை பணியாளர்களை பணி நீக்கம் செய்வதை கைவிட வேண்டும்.

வேலை நிறுத்தம்-ஆர்ப்பாட்டம்

கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கியதற்கும், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதற்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும், 8-ந்தேதி (புதன்கிழமை) கோட்ட அளவில் ஆர்ப்பாட்டமும், 9-ந்தேதி (வியாழக்கிழமை) வட்ட அளவில் ஆர்ப்பாட்டமும் நடத்துவது எனவும், இந்த 3 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்