692 அங்கன்வாடி மையங்களிலும் இணை உணவு உரிய நேரத்தில் வழங்க வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டத்தில்உள்ள 692 அங்கன்வாடி மையங்களிலும் இணை உணவு உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.;
மயிலாடுதுறை மாவட்டத்தில்உள்ள 692 அங்கன்வாடி மையங்களிலும் இணை உணவு உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.
கலெக்டர் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேற்று மயிலாடுதுறை ஒரே நாடு நகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரிசி பருப்புகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என சோதனை மேற்கொண்டார். மேலும் குழந்தைகளுக்கு காலை உணவு என்று சொல்லக்கூடிய இறை உணவான கொழுக்கட்டை காலையிலேயே வழங்கப்பட்டதா என்று குழந்தைகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் கலெக்டர் கூறுகையில், இன்று (நேற்று) காலை மயிலாடுதுறை கூறைநாடு நகராட்சி தொடக்கப்பள்ளியிலுள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டேன். ஆய்வின்போது இணை உணவு கொழுக்கட்டை தயார் செய்யவில்லை என்பது தெரிய வந்தது. அதே நேரத்தில் உடனடியாக இணை உணவு தயார் செய்ய உத்தரவிட்டேன்.
692 அங்கன்வாடி மையங்கள்
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள 692 அங்கன்வாடி மையங்களிலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் குழந்தைகளுக்கு இணை உணவு வழங்க வேண்டும். நான் ஆய்வு செய்யும் போது இணை உணவு தயார் செய்யாமல் இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
முன்னதாக மயிலாடுதுறை காவேரி நகர் கூட்டுறவு சிறப்பு அங்காடி நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் தரத்தையும், அங்கு பொருட்கள் வாங்க வந்திருந்த பொதுமக்களிடம் பொருட்கள் தரமாக வழங்கப்படுகிறதா என்றும் மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார்.தொடர்ந்து, சித்தர்காடு சாலை, ரெயில் நிலையம் அருகில் உள்ள சாலையில் தூய்மை பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின் போது மயிலாடுதுறை நகராட்சி பொறியாளர் சனல்குமார், சுகாதார ஆய்வாளர்கள் உடனிருந்தார்.