மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 66 பேர் கைது

மகாவீர் ஜெயந்தியையொட்டி மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 66 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-05 18:45 GMT

கோவை

கோவை மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தியையொட்டி மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. அன்றைய தினம் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதை தடுக்க மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதன்படி அவர்கள் கோவை மாநகர பகுதியில் உள்ள சிங்காநல்லூர், போத்தனூர், ரத்தினபுரி உள்பட பல இடங்களில் டாஸ்மாக் கடை அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 13 பேரை கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 398 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதுபோன்று புறநகர் பகுதியில் மதுவிற்ற 53 பேரை போலீசார் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 596 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்டத்தில் மொத்தம் 66 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்