65.48 சதவீதம் மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைப்பு

கோவை மாவட்டத்தில் 65.48 சதவீத மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளது.;

Update: 2023-01-03 18:45 GMT

கோவை மாவட்டத்தில் 65.48 சதவீத மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து கோவை மண்டல மின்வாரிய தலைமை என்ஜினீயர் வினோதன் கூறியதாவது:-

ஆதார் எண் இணைப்பு

தமிழகத்தில் மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக் கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 25 லட்சத்து 8 ஆயிரத்து 977 மின் இணைப்புகள் உள்ளன.

இதில் தற்போது 16 லட்சத்து 43 ஆயிரத்து 50 மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளது. இது 65.48 சதவீதம் ஆகும்.

கோவை நகரில் மட்டும் 4 லட்சத்து 71 ஆயிரத்து 658 மின் இணைப்புகள் உள்ளன. இதில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 98 மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த மாதம் இறுதி வரை

நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 991 மின் இணைப்புகள் உள்ளன. இதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 587 மின் இணைப்புகள் இணைக்கப்பட்டு உள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்து 75 ஆயிரத்து 433 மின் இணைப்புகள் உள்ளன. இதில் 4 லட்சத்து 41 ஆயிரத்து 977 மின் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இந்த மாதம் 31-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் ஆதார் இணைப்பு பணி நடைபெறுகிறது. ஆன்லைன் மூலமும் இணைத்துக்கொள்ளலாம். பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் முகாம் அமைத்து ஆதாரை இணைக்க உதவி செய்யப்படுகிறது.

பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.  

மேலும் செய்திகள்