காரில் கடத்திய 65 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
சின்னசேலம் அருகே காரில் கடத்திய 65 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சின்னசேலம்:
சின்னசேலம் அருகே உள்ள நைனார்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே கீழ்குப்பம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விருத்தாசலத்தில் இருந்து சேலம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 65 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது. காரில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த கூளப்பாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வசிகாமணி மகன் சக்திவேல் (வயது 29), பழமலை மகன் தண்டபாணி (47) ஆகியோர் என்பதும், புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். புகையிலை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சேலத்தைச் சேர்ந்த அசோக்குமாரை தேடி வருகின்றனர்.