63 நாயன்மார்கள் திருவீதி உலா

வேதபுரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 63 நாயன்மார்கள் திருவீதி உலா நடந்தது.

Update: 2023-01-27 10:20 GMT

செய்யாறு

செய்யாறு டவுன் திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று காலை 63 நாயன்மார்கள் திருவீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் பள்ளி சிறுவர்களும், 63 நாயன்மார்கள் மற்றும் சிவன், பார்வதி, முருகன், விநாயகர் என பல்வேறு வேடங்களில் சாமிகளோடு உலா வந்தனர்.

முன்னதாக 63 நாயன்மார்களுக்கு அலங்காரம், பாலகுஜாம்பிகை அம்மன் மற்றும் வேதபுரீஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மலர் தூவி அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான நாளை தேரோட்டம் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்