63 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர வணக்க நாள் நிகழ்ச்சி
ராணிப்பேட்டையில் 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர வணக்க நாள் நிகழ்ச்சி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது.;
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21-ந் தேதி சீன எல்லையில் சுட்டுகொல்லப்பட்ட 10 காவலர்களை நினைவு கூறும் விதமாக வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி ராணிப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வீரவணக்க நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா தலைமை தாங்கி மலர்வளையம் வைத்து மறைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து 63 குண்டுகள் முழங்க போலீசார் உயிரிழந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரபு, ரவிச்சந்திரன், சுரேஷ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த காவலர்களின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.