60 பெண் போலீசார் மோட்டார் சைக்கிள் பயணம்

60 பெண் போலீசார் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.;

Update: 2023-10-07 19:46 GMT

மத்திய ஆயுதப்படையை சேர்ந்த பெண் போலீசார் 60 பேர் கன்னியாகுமரியில் இருந்து குஜராத் வரை மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொள்கின்றனர். மத்திய ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன் தலைமையில் கன்னியாகுமரியில் இருந்து கடந்த 5-ந் ேததி புறப்பட்ட இவர்கள் நேற்று மாலை விருதுநகர் வந்தனர். விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் ஜெயசீலன், போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் ஆகியோர் அவர்களை வரவேற்று வழியனுப்பி வைத்தனர். மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் இந்த மத்திய ஆயுதப்படை போலீசார் அக்டோபர் 31-ந் தேதி குஜராத் சென்றடைகின்றனர். அன்றைய தினம் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தின விழா நடைபெறும் நிலையில் இவர்கள் குஜராத் சென்று அந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்