வீடு புகுந்து 6½ பவுன் நகை திருட்டு
அருப்புக்கோட்டையில் வீடு புகுந்து 6½ பவுன் நகையை திருடி சென்றனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை தேவாடெக்ஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது 36). கியாஸ் சிலிண்டர் ஏஜென்சியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இரவில் ராஜ்மோகன் வீட்டின் கதவை பூட்டி விட்டு சாவியை மேலே வைத்துவிட்டு தனது தாய் வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்த ேபாது கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவை திறந்து அதிலிருந்து 6½ பவுன் தங்க நகைகள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து ராஜ்மோகன் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன் ேபரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.