அரசு பஸ்சை சேதப்படுத்திய 6 பேர் கைது

பெரியகுளம் அருகே அரசு பஸ்சை சேதப்படுத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-12-16 19:00 GMT

திருப்பூரில் இருந்து தேனி நோக்கி நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ்சை பெரியகுளம் அருகே உள்ள மதுராபுரியை சேர்ந்த செல்வராஜ் (வயது 50) ஓட்டினார். அந்த பஸ் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கல்லூரி விலக்கு பஸ் நிறுத்தத்தில் சிலர் வழி மறித்தனர். ஆனால் பஸ் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது கற்களை வீசினர். அதில் பஸ்சின் கண்ணாடி சேதமானது. உடனே அவர்களை பயணிகள் உதவியுடன் டிரைவர் செல்வராஜ் பிடித்து தென்கரை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் தேனியை சேர்ந்த விக்னேஷ் (20), அவரது நண்பர்கள் நந்தா (20), ரோகித் (19), சிவா (20), வசந்த் (20), மகேஷ் (20) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்