கஞ்சா விற்ற 6 பேர் கைது

புளியங்குடியில் கஞ்சா விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-05 18:45 GMT

புளியங்குடி:

புளியங்குடியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் செல்வமாணிக்கம் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் விற்பனைக்காக கஞ்சாவை பாக்கெட் போட்டுக் கொண்டிருந்தவர்கள், ேபாலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். அப்போது போலீசார் 6 பேரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்கள் புளியங்குடி கற்பக வீதியைச் சேர்ந்த பூலித்துரை மகன் காசித்துரை (வயது 22), முத்துப்பாண்டி மகன் மருதுபாண்டி (24), மாரியப்பன் மகன் கிருபாகரன் (28), தங்கராஜ் மகன் விக்னேஷ் (20), ரவி மகன் ராஜன் (20), திருப்பதி (48) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் 4 பேர் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கைதானவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, ரூ.1 லட்சத்து 41 ஆயிரம், 4 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஆட்டோ, 2 அரிவாள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்