கஞ்சா விற்ற 6 பேர் கைது

விருத்தாசலத்தில் கஞ்சா விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனா்.;

Update:2023-08-19 00:15 IST

விருத்தாசலம்:

விருத்தாசலம் பகுதியில் அதிகளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் சென்றது. இதை கண்காணிக்கவும், கஞ்சா விற்பவர்களை கைது செய்யவும் வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நேற்று விருத்தாசலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்றதாக செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அக்பர் அலி(வயது 47), ராஜேந்திரபட்டினம் செல்வமணி (38), பாசிகுளம் கருப்பசாமி(39), சுபேந்தர்(33), கார்குடல் அருள்மணி (40), விருத்தாசலம் ஆயியார்மடம் தாமோதரன் (58) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்