அரசு பாதுகாப்பு இல்லத்தில் உள்ளவர்களை தாக்கிவிட்டு 6 சிறார் கைதிகள் தப்பி ஓட்டம் - வேலூரில் அதிர்ச்சி
வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறார் கைதிகள் தப்பி ஓடியுள்ளனர்.;
வேலூர்,
வேலூரில் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறார் கைதிகள் தப்பி ஓடியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறார் கைதிகள் தப்பி ஓடியதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் பாதுகாப்பு இல்லத்தில் உள்ளவர்களை தாக்கிவிட்டு தப்பியோடியதாகவும் இந்த தாக்குதலில் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.