3 சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்

ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை சம்பவம் எதிரொலியாக 3 சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

Update: 2023-02-13 16:54 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை 2 இடங்களிலும், போளூர் மற்றும் கலசபாக்கத்தில் தலா ஒரு இடத்திலும் இருந்த 4 ஏ.டி.எம். மையங்களில் கடந்த 11-ந் தேதி நள்ளிரவு மர்ம நபர்கள் வெல்டிங் எந்திரம் மூலம் வெட்டி அதில் இருந்த ரூ.72¾ லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையிலான போலீசார் திருவண்ணாமலையில் முகாமிட்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கொள்ளை சம்பவம் நடைபெற்ற கடந்த 11-ந் தேதி இரவு திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்ற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், பலராமன் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீஸ்காரர்கள் வரதராஜ், சுதாகர் உள்பட 6 பேரை திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆயுதப்படைக்கு மாற்றி இன்று உத்தரவிட்டார்.

ரோந்து பணியில் ஈடுபட்ட 6 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட சம்பவம் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வரும் போலீசார் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்