வீட்டில் கட்டி வைத்திருந்த 6 ஆடுகள் திருட்டு
வீட்டில் கட்டி வைத்திருந்த 6 ஆடுகள் திருட்டு போனது.;
அன்னவாசல்:
இலுப்பூர் மேலப்பட்டி அண்ணாநகரை சேர்ந்தவர் பழனியாண்டி (வயது 62). இவர் வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் வழக்கம் போல் சம்பவத்தன்று ஆடுகளை மேய்ச்சலுக்கு காட்டு பகுதிக்கு கொண்டு சென்று விட்டு பின்பு வீட்டில் கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் மறுநாள் காலையில் பார்த்தபோது வீட்டில் கட்டியிருந்த 6 ஆடுகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பழனியாண்டி இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.