முன் மாதிரி கிராம ஊராட்சி திட்டத்தின் கீழ் ரூ.6½ கோடியில் பணிகள்

ஏலகிரி மலையில் முன் மாதிரி கிராம ஊராட்சி திட்டத்தின் கீழ் ரூ.6½ கோடியில் பணிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-11-28 17:35 GMT

ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஏலகிரி மலையில் உள்ள அண்ணா கலைஞர் அரங்கத்தில் ஏலகிரி மலை ஊராட்சி மன்ற சார்பில் முன் மாதிரி கிராம ஊராட்சி திட்டத்தின் கீழ் ரூ.6 கோடியே 65 லட்சம் மதிப்பிலான புதிய வளர்ச்சி பணிகள் தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி புதிய பணிளை தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.அண்ணாதுரை நல திட்ட உதவிகளை வழங்கினார். ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி முன்னிலை வகித்தார்.

விழாவில் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர் சூரியகுமார், திட்ட இயக்குனர் கு.செல்வராசு, ஒன்றியக் குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர்கள் கவிதா தண்டபாணி, சிந்துஜா ஜெகன், உமாகன்ரங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு உறுப்பினர்கள், ஏலகிரி மலை பொதுமக்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்