சூதாடிய 6 பேர் கைது
விருதுநகர் அருகே சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.;
விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டியில் ஆமத்தூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தனியார் தோட்டத்தில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்ததாக அதே கிராமத்தை சேர்ந்த சதாசிவம் (வயது56), வீரய்யா (67), வீரராஜ் (60), சரவணன் (49), காளியப்பன் (64), சங்கரலிங்காபுரத்தை சேர்ந்த வீரராஜ் (70) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.