மது, கஞ்சா விற்ற 6 பேர் கைது

மது, கஞ்சா விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-06-13 00:45 IST

கூத்தாநல்லூர் போலீசார் நேற்று கூத்தாநல்லூர், மரக்கடை, கோரையாறு, சித்தாம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பனை செய்த சித்தாம்பூர் தெற்கு தெருவை சேர்ந்த காளிதாஸ் (வயது42), கோரையாறு அகமலாங்கரையை சேர்ந்த முருகதாஸ் (41), சுரேஷ் (43), சித்தாம்பூர் மேலத்தெருவை சேர்ந்த கண்ணையன் (52), மரக்கடை, கீழத்தெருவை சேர்ந்த நாகூரான் (55) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அதேபோல் கஞ்சா விற்பனை செய்த கூத்தாநல்லூர் முகமதியா தெருவை சேர்ந்த சாகுல் அமீது (21) என்பவரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்